வேலூரில் உள்ள 247 கிராம ஊராட்சியில் உள்ள கிராம ஊராட்சியின் செயலாளர்களுக்கு அடிப்படை கணினி பயிற்சி காட்பாடியில் உள்ள கிங்ஸ்டன் பொறியியல் கல்லூரியில் மாவட்ட உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) திரு. பூ.இராமகிருஷ்ணன் அவர்கள் துவக்கி வைக்கப்பட்டது.
வேலூர் மாவட்டத்திற்கு உட்பட்ட 247 கிராம ஊராட்சியில் உள்ள கிராம ஊராட்சியின் செயலாளர்களுக்கு அடிப்படை கணினி பயிற்சி..
காட்பாடியில் உள்ள கிங்ஸ்டன் பொறியியல் கல்லூரியில் முதற்கட்டமாக இரண்டு நாட்களுக்கு (27/10/2022 -28/10/2022) ஆகிய தேதிகளில் மூன்று அணிகளுக்கு பயிற்சி கொடுக்கப்பட உள்ளது.
இப்பயிற்சியினை வேலூர் மாவட்ட உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) திரு. பூ.இராமகிருஷ்ணன் அவர்கள் தலைமையிலும் மற்றும் கிங்ஸ்டன் பொரியல் கல்லூரியின் முதல்வர் அவர்களின் முன்னிலையிலும் குத்துவிளக்கு ஏற்றி பயிற்சியை துவக்கி வைக்கப்பட்டது.
மேலும் பயிற்சிக்கான உபகரணங்கள் ஊராட்சி செயலர்களுக்கு வழங்கப்பட்டது. இப்பயிற்சியினை மாவட்ட வள மைய அலுவலர் திரு. க.உத்திராபதி அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார்.
CATEGORIES வேலூர்
TAGS 247 கிராம ஊராட்சி செயலாளர் கணினி பயிற்சிகிங்ஸ்டன் பொறியியல் கல்லூரிதமிழ்நாடுதலைப்பு செய்திகள்வேலூர் மாவட்டம்