வேலூரில் ஹோட்டல்களில் பயன்படுத்திய வீட்டு உபயோக எரிவாயு உருளைகள் 10 பறிமுதல்!
வேலூரில் நேற்று காலை 10 மணி முதல் நண்பகல் 12 மணி வரை பாபுராவ் ரோடு மற்றும் பழைய பேருந்து நிலையம், காய்கனி மார்க்கெட் பகுதிகளில் டீக்கடை மற்றும் ஹோட்டல்களில் வீட்டுக்கு பயன்படுத்தக்கூடிய எரிவாயு உருளைகள் தவறுதலாக பயன்படுத்தி வருகின்றனரா? என ஆய்வு மேற்கொண்டனர். அப்போது ஹோட்டல்களிலும், டீக்கடைகளிலும் வீட்டுக்கு பயன்படுத்தும் எரிவாயு உருளைகள் பயன்படுத்துவது தெரியவந்தது.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி உத்தரவின் பேரில், மாவட்ட வருவாய் அலுவலரின் அறிவுறுத்தல் படி, வேலூர் மாவட்ட பறக்கும் படை தனி வட்டாட்சியர் வே.ப. சுரேஷ்குமார் மற்றும் பறக்கும் படை குழுவினர் இணைந்து 10 எரிவாயு உருளைகளை பறிமுதல் செய்தனர்.
இவற்றை ஸ்ரீ வேதா பாரத் கேஸ் ஏஜென்சியிடம் ஒப்படைத்லனர். இந்த சம்பவம் கடை உரிமையாளர்களிடம் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.