எஸ்டிபிஐ கட்சியின் சார்பாக நெல்லை மண்டல உள்ளாட்சி பிரதிநிதிகள் மேலாண்மை பயிற்சி பட்டறை

நெல்லை: எஸ்டிபிஐ கட்சியின் சார்பாக நெல்லை மண்டல உள்ளாட்சி பிரதிநிதிகள் மேலாண்மை பயிற்சி பட்டறை நெல்லை புறநகர் மாவட்ட பொதுச்செயலாளர் களந்தை மீராசா தலைமையில் ஏர்வாடியில் வைத்து காலை 10.00 மணிக்கு நடைபெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளராக எஸ்டிபிஐ கட்சியின் தமிழ் மாநில பொதுச்செயலாளர் நிஜாம் முகைதீன் உள்ளாட்சி பிரநிதிகள் மேலாண்மை என்ற தலைப்பில் வகுப்பு எடுத்தார். உள்ளாட்சி உறுப்பினர் வேலை என்ற தலைப்பில் மாநில செயற்குழு உறுப்பினர் ஷபிக் அஹமது வகுப்பு எடுத்தார், ஆளுமை வளர்ச்சி என்ற தலைப்பில் மாநில பொருப்பாளர் S.S.A.கரிம் வகுப்பு எடுத்தார்.
சோஷியல் மீடியா என்ற தலைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் மத்தின் வகுப்பு எடுத்தார். இதில் தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, நெல்லை மாநகர், நெல்லை புறநகர், ஆகிய மாவட்டங்களில் இருந்து 120 க்கும் மேற்பட்டோர் பங்கெடுத்தனர் இறுதியாக தூத்துக்குடி மாவட்ட துணை தலைவர் உமர் நன்றியுரையாற்றினார்.
