வேலூர்: தாய் , தந்தையை இழந்த நிலையிலும் ஆணழகன் போட்டியில் மாவட்ட அளவில் வெற்றி பெற்றுள்ள இளைஞர் , வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
வேலூர் மாநகர் கஸ்பா டாக்டர் . அம்பேத்கர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் வேணுகோபால் ( 23 ) . பட்டதாரி இளைஞரான இவரின் பெற்றோர் இருவரும் உயிரிழந்த நிலையில்,
தனது பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்து வருகிறார். சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு உடற்பயிற்சி செய்து ஆணழகன் போட்டிக்கு தயாராகி வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த 16 ஆம் தேதி வேலூரில் நடைபெற்ற வேலூர் , திருவண்ணாமலை, திருவள்ளூர், காஞ்சிபுரம், சேலம், ராணிப்பேட்டை,திருப்பத்தூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களுக்கு இடையேயான தமிழ்நாடு அமைச்சூர் ஆணழகன் போட்டியில் கலந்துகொண்டு 55 கிலோ எடை பிரிவில் தங்கம் வென்றுள்ளார் .
இதனையடுத்து இன்று வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
மேலும், இளைஞர் வேணுகோபால் தொடர் சாதனைகளை படைக்க மாவட்ட கண்காணிப்பாளர் வாழ்த்து தெரிவித்தார்.
தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்று பதக்கம் வெல்ல வேண்டும், தனக்கு பின்னால் வரும் தனது பகுதி இளைஞர்களுக்கு தான் முன்னுதாரனமாக இருக்க வேண்டும் என இளைஞர் வேணுகோபால் தெரிவித்தார்.