வேலூர் தீபாவளி பண்டிகையில் பொதுமக்கள் ஒன்று கூடும் இடங்களில் சரவெடி பட்டாசுகளை வெடிக்க கூடாது மாவட்ட ஆட்சியர் உத்தரவு.
வேலூர் தீபாவளி பண்டிகையில் பொதுமக்கள் ஒன்று கூடும் இடங்களில் சரவெடி பட்டாசுகளை வெடிக்க கூடாது மாவட்ட ஆட்சியர் குமரவேல் பாண்டியன் அவர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கடந்த 3 ஆண்டுகளாக கொரோனா தடுக்கும் விதத்தில் உச்சநீதிமன்றம் கட்டுப்பாடுகளை விதித்தது. அந்த விதிகளின் படி காலை 6 மணி 7 மணி வரை இரவு 7மணி முதல் 8 மணி வரை பட்டாசுகளை வெடிக்க நேரம் ஒதுக்கி உத்தரவிடப்பட்டது.
இந்த ஆண்டு வரும் 24 -ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. அன்றைய தினம் அறிவிக்கப்பட்ட நேரத்தில் பட்டாசுகளை வெடிக்கலாம். வெடிக்கும் நேரங்களில் சுற்றுச்சூழல் பாதிப்பு இல்லாமல் பேணி காப்பது ஒவ்வொரு கடமையாகும்.
இதை பொதுமக்கள் கவனத்தில் கொண்டு குறைந்த சத்தம் காற்று மாசு ஏற்படுத்தக்கூடிய பட்டாசுகளை வெடிக்க வேண்டாம். திறந்தவெளியில் பொதுமக்கள் ஒன்று கூடி பட்டாசுகளை வெடிக்கலாம். சரவெடி வெடிப்பதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும்.
குறிப்பாக வழிபாட்டுத்தலங்கள் மருத்துவமனைகள் அமைதி காக்கும் இடங்கள் போன்ற இடங்களில் வெடிக்கக் கூடாது. குடிசைகள் மற்றும் எளிதில் தீ பற்ற கூடிய பகுதிகளில் பட்டாசுகளை வெடிக்க கூடாது என்று செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.