வேலூர் பழைய பேருந்து நிலையத்தில் 24 மணி நேரமும் ஹான்ஸ் பான்பராக். பீடி சிகரெட்.. விற்பனை படுஜோர்.

வேலூர் பழைய பேருந்து நிலையம் ஆனது தினமும் பல ஆயிரக்கணக்கானோர் பயணம் செய்ய வந்து போகும் பகுதி இங்கு திருவள்ளுவர் சிலை அருகில் ஆவின் பூத் பின்னால் இரவும் பகலும் 24 மணி நேரமும் ஹான்ஸ் பான்பராக், பீடி சிகரெட், வெளிப்படையாக விற்பனை நடக்கிறது. பீடி சிகரெட் வாங்குபவர்கள். அங்கேயே நின்று பிடிப்பதினால் அந்த இடமே புகை மண்டலமாக காணப்படுகிறது.
இதனால் பயணிகள் பொதுமக்கள் புற்றுநோய், சுவாச கோளாறு போன்றவை ஏற்படுத்தும் நோய்களுக்கு தள்ளப்படுகிறார்கள். சுகாதாரத் துறையும். மாநகராட்சி நிர்வாகமும் ஏன் கண்டுகொள்ளவில்லை என்பது பொதுமக்களின் கேள்வியாக உள்ளது. எனவே ஆட்சியர் இதை முழுவதுமாக அகற்றி மக்களின் உயிரை பாதுகாக்க வேண்டும்என்பது பொதுமக்களின் கோரிக்கை கோரிக்கையாக உள்ளது.