வேலூர் மாநகராட்சி டவுன் ஹால் சாலையோர நடைமேடை சேதம்

வேலூர் மாநகராட்சி பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள டவுன் ஹால் சாலையோர நடைமேடை மேல் தளம் (ஸ்லாப்) சேதமடைந்து காணப்படுகிறது.
இந்தப் பகுதியில் பொதுமக்கள் அதிகம் நடமாடக் கூடிய பகுதி இதனால் பலர் இன்னல்களுக்கு ஆளாகின்றனர்.
இன்னல்கள் சிறியதாக இருப்பின் நாளை பெரிய ஆபத்தாக முடியும் முன்னரே மாநகராட்சி நிர்வாகம் இது எங்கள் கட்டுப்பாட்டில் இல்லை தேசிய நெடுஞ்சாலை கட்டுப்பாடு அவர்களது பணி என்று தட்டிக் கழிக்காமல் நடைமேடை பாதையை சீரமைத்து தர வேண்டும் என்பது பொது மக்களின் கோரிக்கையாக உள்ளது.
CATEGORIES வேலூர்
TAGS Vellore corporationVellore town hallதமிழ்நாடுதலைப்பு செய்திகள்நடைபாதை சேதம்வேலூர் டவுன் ஹால்வேலூர் மாநகராட்சி