BREAKING NEWS

வேலூர் மாநகராட்சி பொது இடத்தில் குப்பைகளை கொட்டினால் அபராதம் காட்பாடி பகுதியில் எச்சரிக்கை போஸ்டர் ஒட்டும் பணி தீவிரம்.

வேலூர் மாநகராட்சி பொது இடத்தில் குப்பைகளை கொட்டினால் அபராதம் காட்பாடி பகுதியில் எச்சரிக்கை போஸ்டர் ஒட்டும் பணி தீவிரம்.

 

வேலூர் மாநகராட்சியில் பொது இடங்களில் குப்பைகளை கொட்டினால் ரூ.500 அபராதமாக வசூலிக்கும் திட்டம் நேற்று முதல் அமலுக்கு வந்தது. அதனை வீடியோ எடுத்து அனுப்பினால் அனுப்பும் நபருக்கு ரூ.200 வெகுமதி என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 

அதன்படி மாநகராட்சி திட்ட விதிகள்2016ன் படி வீடுகளின் முன் குப்பைகளை எரித்தால் எரித்தால் ₹100. வணிக நிறுவனங்களுக்கு ரூ₹200 குப்பைகளை தரம் பிரித்து வழங்கா விட்டால் ₹100 வணிகநிறுவனங்களுக்கு ₹500 வணிக வளாகங்களுக்கு ₹1,000 கழிவு நீர் கால்வாய்கள் தெருக்கள் மற்றும் காலி மனைகளில் குப்பைகளை கொட்டினால் ₹200 வசூலிக்கப்படும் என்று மாநகராட்சி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 

இதை பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் காட்பாடி காங்கேயநல்லூர் பகுதியில் எச்சரிக்கை போஸ்டரை ஒட்டும் பணியில்மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் 1 வதுமண்டல சுகாதார அலுவலர் சிவக்குமார் ஆகியோர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )