வேலூர் மாவட்டம் வேலப்பாடி பகுதியில் தனது 3 சக்கர வாகனத்திலேயே உயிரிழந்து கிடந்த மாற்றுத்திறனாளி உடலை மீட்டு வேலூர் தெற்கு காவல் நிலைய போலீசார் விசாரணை.

வேலூர் மாவட்டம் வேலூர் அடுத்த வேலப்பாடி சேர்வை முனுசாமி தெருவைச் சேர்ந்தவர் 44 வயதுடைய மாற்றுத்திறனாளி முருகன். இவர் நேற்று இரவு வேலப்பாடி பெரிய தனம் சுப்ரயா முதலிதெரு சாலையோரம் தனது 3 சக்கர மாற்றுத்திறனாளிகள் ஸ்கூட்டரில் இறந்த நிலையில் இருந்துள்ளார்.
இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் வேலூர் தெற்கு காவல் நிலைய போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த உதவி காவல் ஆய்வாளர் காஞ்சனா தலைமையிலான போலீசார் முருகனின் சடலத்தை மீட்டு வேலூர் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரி சவக்கிடங்கிற்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இதுகுறித்து தெற்கு காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
CATEGORIES வேலூர்
TAGS 3 சக்கர வாகனத்திலேயே உயிரிழந்து கிடந்த மாற்றுத்திறனாளிதமிழ்நாடுதலைப்பு செய்திகள்வேலப்பாடிவேலூர் மாவட்டம்