BREAKING NEWS

வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்வு நாள் கூட்டம்.

வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்வு நாள் கூட்டம்.

வேலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நா.மதிவாணனின் உத்தரவின் பேரில், பொதுமக்கள் குறைதீர்வு நாள் ஒவ்வொரு வாரமும் புதன்கிழமையன்று நடத்தப்பட்டு வருகிறது.

இந்த சிறப்பு மனு நாளில் பொதுமக்கள் தங்கள் குறைகளை மனுக்களாக மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம், நேரில் அளித்து குறைகளை கூறி வருகின்றனர். அது மட்டுமின்றி வாரத்திலுள்ள அனைத்து வேலை நாட்களிலும், பொதுமக்களின் மனுக்களை நேரில் பெற்று உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு, பொதுமக்களின் பிரச்சனைகள் தீர்க்கப்பட்டு வருகின்றது.

இன்று 12.03.2025-ம் தேதி மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் தலைமையில் நடைபெற்ற, சிறப்பு பொதுமக்கள் குறை தீர்வு மனு நாளில், 35 மனுக்கள் பெறப்பட்டு மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துக் கொண்டார்.

மேலும் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் (தலைமையகம் ) உடன் இருந்தார்.

இவ்வாறு வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக பத்திரிகை செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS