BREAKING NEWS

வேலூர் வசந்தபுரம் ஆறுமுகம் முதலியார் தெருவில் விநாயகர் சதுர்த்தி விழா மற்றும் அன்னதானம் வழங்கல்! 

வேலூர் வசந்தபுரம் ஆறுமுகம் முதலியார் தெருவில் விநாயகர் சதுர்த்தி விழா மற்றும் அன்னதானம் வழங்கல்! 

வேலூர் சாலையோர வியாபாரிகள் சங்க தலைவர் கஜா (எ) கிருஷ்ணமூர்த்தி தலைமையில் வசந்தபுரம் ஆறுமுகம் முதலியார் தெருவில் விநாயகர் சதுர்த்தி திருவிழா மற்றும் அன்னதான விழா நடந்தது.

வேலூர் எம்.எல்.ஏ. கார்த்திகேயன் பங்கேற்று அன்னதானத்தை தொடங்கி வைத்து சிறப்பித்தார்.

வேலூர் மாவட்டம், வேலூர் கஸ்பா, வசந்தபுரம், கண்டக்டர் ஆறுமுகம் முதலியார் தெருவில் விநாயகர் சதுர்த்தி திருவிழாவை முன்னிட்டு, வேலூர் சாலையோர வியாபாரிகள் சங்கத் தலைவர் கஜா (எ) கிருஷ்ணமூர்த்தி தலைமையிலும், வசந்தபுரம் கண்டக்டர் ஆறுமுகம் முதலியார் தெரு நிர்வாகிகள் வில்சன், குப்பன், பாஸ்கரன், கவினேஷ், அந்தோணிராஜ், சரண், நாகராஜ், காவியாஸ், மகேஷ் ஆகியோர் முன்னிலையிலும், விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக, வேலூர் மாநகரத்தின் (முன்னாள்) முதல் மேயர், மாநகர திமுக செயலாளரும், வேலூர் சட்டமன்ற உறுப்பினருமான ப.கார்த்திகேயன் கலந்துகொண்டு சிறப்பு பூஜைகள் செய்து, இனிப்புகள் வழங்கி அன்னதானத்தை தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து சிறப்பு அழைப்பாளர் எம்‌எல்.ஏ.வுக்கும், சாலையோர வியாபாரிகள் சங்கத் தலைவருக்கும் விழாக் குழு நிர்வாகிகளுக்கும், விழாக் குழு நிர்வாகிகள் சார்பில், பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டது. இந்நிகழ்வின் போது திமுக நிர்வாகிகள் முன்னாள் மாமன்ற உறுப்பினர் மேகநாதன், வார்டு திமுக துணைச் செயலாளர் அப்துல் ரகுமான், பாலா, மோகன் ஆகியோர் கலந்து கொண்டனர். இவ்விழாவில் இப்பகுதிமக்கள் மற்றும் இளைஞர்கள், பக்தர்கள் என பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Share this…

CATEGORIES
TAGS