வேலூர் CMC மருத்துவமனையின் சில சிகிச்சை பிரிவுகள் புதிய மருத்துவ மனைக்கு மாற்றம்.

வேலூர் மாவட்டம்,
21/10/22 முதல் எமது இருதய சிகிச்சை பிரிவு CMC ராணிப்பேட்டை வளாகத்திற்கு இடமாற்றம் செய்யப்படுகிறது . எனினும்
வேலூர் நகர வளாகத்தில் வெளிநோயாளிகள் மற்றும் உள்நோயாளிகளுக்கான கன்சல்டேஷன் சேவைகள் தொடரும்.
வேலூர் நகர வளாகத்தில் உள்ள நெஞ்சுவலி பிரிவு மூடப்பட்டு, ராணிப்பேட்டை வளாகத்தில் மட்டுமே ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை அளிக்கப்படும்.
நெஞ்சு வலி (மாரடைப்பு) உள்ள நோயாளிகள் ராணிப்பேட்டை வளாகத்தில் உள்ள மார்பு வலி பிரிவை அனுக அறிவுறுத்தப் படுகிறார்கள்.
அவசர சிகிச்சைப் பிரிவு சேவைகள் முன்பு போலவே வேலூர் நகர வளாகத்தில் தொடர்ந்து வழங்கப்படும். என மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டது.
CATEGORIES வேலூர்