வேலூர் CSI மத்திய ஆலயத்தின் ஆண்கள் ஐக்கிய சங்கம் சார்பில் மனவளர்ச்சி உள்ள பிள்ளைகளுக்கு நலத்திட்ட உதவிகள்
இன்று வேலூர் CSI மத்திய ஆலயத்தின் ஆண்கள் ஐக்கிய சங்கம் சார்பில் வேலூர் சாய்நாதபுரம் பகுதி உள்ள அன்பு இல்லம் அடைக்கலம் காப்பகத்தில் உள்ள மாற்று திறனாளிகள் மனவளர்ச்சி உள்ள பிள்ளைகளுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் கிறிஸ்மஸ் விழா மத்திய ஆலயத்தின் தலமை ஆயர் திரு.Rev.சைமன் அவர்கள் வாழ்த்துக்களுடன்
ஆண்கள் ஐக்கிய சங்கத்தின் செயலாளர் ஆர்.டேவிட் ராஜ்குமார் தலைமையிலும் பொருளர் D..ஜேம்ஸ் சேகர் முன்னிலையிலும் துணை தலைவர் J.அன்பரசு வரவேற்பிலும் நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக மத்திய ஆலயத்தின் செயலர் C.ஜோஷ்வா இணை ஆயர் திரு.வினோத்குமார் காப்பகத்தின் பொறுப்பாளர் டாக்டர்.செல்லையா பொருளாளர் T.ஆரோன் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்கள் இந்த நிகழ்வில் குருசேகர குழு உறுப்பினர்கள் மூத்த அங்கத்தினர் ஆண்கள் ஐக்கிய சங்கத்தின் நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.