BREAKING NEWS

வேளாண்மைத்துறை அதிகாரிகள் உரக் கடைகளில் திடீர் ஆய்வு.

வேளாண்மைத்துறை அதிகாரிகள் உரக் கடைகளில் திடீர் ஆய்வு.

வேளாண்மைத்துறை அதிகாரிகள் உரக் கடைகளில் திடீர் ஆய்வு.

தஞ்சாவூர் மாவட்டத்தில் குறுவை சாகுபடி தற்போது பணிகள் முழு வீச்சில் நடைபெறுவதால் உரக்கடைகளில்
திடீர் ஆய்வுகளை வேளாண்மை அதிகாரிகள் நடத்தினர்.

வேளாண்மை இணை இயக்குநர் அறிவுரைகளின்படி தஞ்சாவூர் மாவட்டம் முழுவதும் மொத்த விற்பணையாளர்கள் சில்லரை கடைகளில்
நேற்று திடீர் ஆய்வு செய்தனர்.

இந்த நிலையில் கும்பகோணம் வட்டாரத்தில் வேளாண்மை உதவி இயக்குநர் மோகன் தலைமையில் அதிகாரிகள் உரக்கடைகளில் தரக்கட்டுப்பாடுகளை
ஆய்வு செய்தனர்.

ரசாயண உரங்களை விவசாயிகளுக்கு விற்பணை செய்யும் போது கூடுதலாக மற்ற பொருட்களை விற்பணை செய்வது கண்டறியப்பட்டாலும் கூடுதல் விலைக்கு விற்பனை செய்பவர்கள் மீது உர உரிமம் நிரந்திரமாக ரத்து செய்யப்படும் என எச்சரித்தனர்.

ஆய்வின் போது வேளாண்மை உதவி இயக்குநர் தேவிகலாவதி, வேளாண்மை அலுவலர்கள் உள்பட பலர் இருந்தனர்.

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )