BREAKING NEWS

வைகாசி விசாகம்: நெல்லை – திருச்செந்தூர் இடையே சிறப்பு ரயில்.

வைகாசி விசாகம்: நெல்லை – திருச்செந்தூர் இடையே சிறப்பு ரயில்.

நெல்லை – திருச்செந்துார் விரைவு சிறப்பு ரயில் நெல்லையில் இருந்து காலை 11:15 மணிக்கு புறப்பட்டு மதியம் 12:45க்கு திருச்செந்துார் சென்று சேரும். மறுமார்க்கத்தில் திருச்செந்துார் – நெல்லை விரைவு சிறப்பு ரயில் திருச்செந்துாரிலிருந்து இரவு 8:30 மணிக்கு புறப்பட்டு இரவு 10:10க்கு நெல்லை சென்று சேரும். இந்த ரயில்கள் பாளையங்கோட்டை, செய்துங்கநல்லுார், ஸ்ரீவைகுண்டம், நாசரேத், ஆறுமுகநேரி ரயில்நிலையங்களில் நின்று செல்லும். . .இந்த ரயில்களில் 10 இரண்டாம் வகுப்பு பொது பெட்டிகள், 2 இரண்டாம் வகுப்பு மற்றும் சரக்குபெட்டிகள் இணைக்கப்படும்.மேலும் பயணிகள் வசதிக்காக பாலக்காடு-திருச்செந்துார், திருச்செந்துார் – நெல்லை விரைவு ரயில்களில் ஜூன் 9 – 13 வரையிலும், நெல்லை – திருச்செந்துார், பாலக்காடு – திருச்செந்துார் விரைவு ரயில்களில் ஜூன் 8 – 12 வரையிலும் கூடுதலாக ஒரு இரண்டாம் வகுப்பு பொதுப் பெட்டி இணைக்கப்பட உள்ளது.

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )