வைகை 58 ஆம் கால்வாயிலிருந்து விவசாய நிலங்களுக்கு செல்லும் தண்ணீரை பார்வையிட்டு கால்வாய் முறையாக தூர்வாரபட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்த அமமுக ஒன்றிய செயலாளர்.
தேனி செய்தியாளர் முத்துராஜ்.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணையில் இருந்து 58 ஆம் கால்வாய் வழியாக ஆண்டிப்பட்டி நிலக்கோட்டை உசிலம்பட்டி பகுதியைச் சேர்ந்த 58 கிராம கண்மாய் குளங்கள் பாசன வசதி பெரும் வகையில் கால்வாய் மூலம் தண்ணீர் கொண்டு செல்லும் திட்டம் செயல்பட்டு வருகிறது.
அதன்படி தேனி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்த நிலையில் வைகை அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது அதனையொட்டி 58 ஆம் கால்வாயில் இருந்து 100 கன அடி தண்ணீர் வீதம் உசிலம்பட்டி வரை உள்ள 58 கிராம விவசாய நிலங்கள் பாசன வசதி பெரும் வகையில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது இந்த 58ம் கால்வாய் திறந்துவிடும் பொழுது கால்வாய் தூர்வாரபடாததால் பலமுறை உடைந்துள்ளது.
இந்நிலையில் 58 ம் கால்வாயில் இருந்து விவசாயிகளுக்கு தண்ணீர் முறையாக செல்கிறதா கால்வாய் தூர்வாரபட்டுள்ளதா என்பதை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்த அமமுக வடக்கு ஒன்றிய செயலாளர் தவச்செல்வம்,
உடன் வடக்கு ஒன்றிய இணைச் செயலாளர் அய்யனன் பேரூர் கழக இணைச் செயலாளர் ரவிக்குமார் பேரூர் கழகத் துணைச் செயலாளர் நல்ல மாயன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.