வைகோ ஆவணப்படத்தின் டிக்கெட் பிரச்சினை. தேனி வெற்றி திரையரங்க வளாகத்தில் மதிமுக நிர்வாகிகளுக்குள் சலசலப்பு.

தேனி மாவட்ட மதிமுக சார்பில் வைகோ குறித்த “மாமனிதன் வைகோ” என்ற ஆவணபடம் தேனி வெற்றி திரையரங்கத்தில் இன்று திரையிடப்பட்டது.
இதற்காக
மதிமுக தலைமை நிலைய செயலாளரும் வைகோவின் மகனுமான துரை வைகோ தேனியில் உள்ள வெற்றி திரையரங்கிற்கு வந்தார்.
தேனி மாவட்டம் மதிமுக சார்பில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
வைகோ ஆவணத் திரைப்படம் காண தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மதிமுக நிர்வாகிகள் திரையரங்கிற்கு வந்திருந்தனர்.
அவர்களில் ஒரு சிலருக்கு ஆவணப்படம் காண்பதற்கான டிக்கெட் கிடைக்கவில்லை என்று திரையரங்கு வளாகத்தில் மதிமுக மாவட்ட நிர்வாகிகளுடன் தொண்டர்கள் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
கட்சியினருக்குள் ஏற்பட்ட வாக்குவாதத்தால் திரையரங்கு வளாகத்தில் சற்று நேரம் சலசலப்பும் பரபரப்பும் ஏற்பட்டது.
CATEGORIES தேனி