ஸ்ரீஅங்காளம்மன் கோயிலில் அமாவாசை சிறப்பு பூஜை!

நேற்று (ஞாயிற்று கிழமை) மாலை 3:50 மணியளவில் அமாவாசை திதி ஆரம்பம் ஆனது. இதையடுத்து முதல் கட்ட பூஜையாக காட்பாடி அடுத்த பிரம்மபுரம் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கும், ஸ்ரீ அகோர காளியம்மனுக்கும் படையலுடன் அருள் வாக்கு பூஜை நடைபெற்றது.

பின்னர் இரவு 8:00 மணியளவில் அன்னதானம் நடைபெற்றது. தொடர்ந்து இரவு 11:00 மணியளவில் ஸ்ரீ அகோர காளியம்மனுக்கு சிறப்பு மிளகாய் யாகம் நடைபெற்றது. நள்ளிரவு 12:00 மணியளவில் ஸ்ரீ அகோர காளியம்மனுக்கு ரத்த அபிஷேகம் நடைபெற்றது. திரளான பக்தர்கள் பூஜையில் கலந்து கொண்டு அம்மனின் அருள் பெற்றுச் சென்றனர். பூஜைக்கான அனைத்து ஏற்பாடுகளையும் வேலூர் மாவட்டத்தின் முதல் அகோரி ,
அகோரி குரு ஸ்ரீராம்ராஜ் தலைமையில் வெகுவிமரிசையா க நடந்தது. பூஜையில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதங்கள் விநியோகம் செய்யப்பட்டது.
CATEGORIES வேலூர்
