ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஊழியரை காலால் எட்டி உதைத்த அதிகாரி!!
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஊழியரை காலால் எட்டி உதைத்த அதிகாரி!!
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. 108 திவ்யதேசங்களில் ஒன்றான வைணவ கோவிலுக்கான சிறப்பையும் இது பெற்றுள்ளது. தமிழக அரசின் ராஜகோபுரத்தில் இந்த முத்திரை இடம்பெற்றுள்ளது. மிகவும் பழமை வாய்ந்த இந்த கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிகின்றனர். ஆண்டாள் கோவில், சக்கரத்தாழ்வார் சன்னதி, கோபுரவாசல் மற்றும் அலுவலகப் பணிகளுக்காகச் செயல் அலுவலர் உட்பட சுமார் 30-க்கும் மேற்பட்டோர் பணியில் உள்ளனர்.
இந்நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் மல்லபுரம் தெரு பகுதியைச் சேர்ந்தவர் கர்ணன். இவர் ஆண்டாள் கோவிலில் சுமார் 10 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வரும் இவருக்கு ஒரு சில அதிகாரிகள் கடுமையான பணிச்சுமை தருவதாகவும் இதனால் ஏற்கனவே உடல் குறைபாடுள்ள தனக்கு மிகுந்த மன உளைச்சல் ஏற்பட்டுள்ளதாகவும், உடல் ரீதியான பிரச்சனைகள் ஏற்படுவதாகவும் தொடர்ந்து புகார் தெரிவித்தார்.
இது தொடர்பாகச் செயல் அலுவலரிடம் புகார் அளித்தும் கூட வேண்டுமென்றே தனக்கு இரவு பணி வழங்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதனால் உடல் நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், மேலும், அதிகாரிகள் பணியாளர்களை கடுமையான வார்த்தைகளால் விமர்சிப்பதாகவும், பெரும்பாலான பணியாளர்கள் அதிகாரிகளுக்கு பயந்து இதுபோன்ற செயல்களை வெளியில் சொல்லாமல் உள்ளதாகவும், நாள்தோறும் இதே நிலை நீடிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த சூழ்லில், கோயில் கணக்கர் சுப்பையா என்பவர் சக பணியாளர்கள் இருக்கும்போதே பணியாளர் ஒருவரை எட்டி உதைக்கும் விடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. செயல் அலுவலர் பணியாளர்கள் முன்னிலையில் அதிகாரி ஒருவர் எட்டி உதைக்கும் போது, அவர் மீது எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என புகார் எழுந்துள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.