BREAKING NEWS

ஹோட்டல்களில் உணவு சேவை கட்டணம் வசூலிக்க கூடாது…

ஹோட்டல்களில் உணவு சேவை கட்டணம் வசூலிக்க கூடாது…

பெரும்பாலும் பெரிய பெரிய ஹோட்டல்களுக்கு செல்லும் பொழுது அங்கு வாடிக்கையாளர்களுக்கு ஊழியர்கள் உணவு சப்ளை செய்வார்கள். வாடிக்கையாளர் சாப்பிட்ட உணவில் திருப்தி இருந்தால் மட்டுமே அந்த ஊழியருக்கு டிப்ஸ் கொடுப்பது வழக்கம். ஆனால் ஒருசில டிப்ஸ் கட்டாயம் கொடுக்க வேண்டும். இந்த நிலையில் ஹோட்டல் உணவு மீது சேவை கட்டணம் வசூலிக்க கூடாது என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, தங்கள் ஊழியர்களுக்கு அதிக சம்பளம் தர விரும்பினால் உணவுப் பொருட்களின் விலையை உயர்த்திக் கொள்ளலாம். அதை விட்டுவிட்டு சேவை கட்டணம் என்ற பெயரில் அந்த சுமையை வாடிக்கையாளர்களின் தலையில் சுமத்த கூடாது. சேவையில் திருப்தி ஏற்பட்டால் வாடிக்கையாளர்கள் முன்வருவார்கள் என்று தெரிவித்துள்ளார்.

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )