10 லட்சம் ஆஷா பணியாளர்களுக்கு கௌரவம்!! உலக சுகாதார அமைப்பு அதிரடி!!
10 லட்சம் ஆஷா பணியாளர்களுக்கு கௌரவம்!! உலக சுகாதார அமைப்பு அதிரடி!!
உலக பேரிடரான கொரோனா தொற்றின் போது அயராமல் இரவு, பகல் என்று பாராமல் உழைத்த 10 லட்சம் ஆஷா பணியாளர்கள் கவுரவிக்கப்பட்டு இருக்கிறார்கள்.இந்தியா முழுவதிலும் உள்ள கிராமப்புறங்களில் அங்கீகரிக்கப்பட்ட ஆஷா பணியாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். இவர்கள் கொரோனா காலத்தில் வீடு வீடாக சென்று நோயாளிகளை அடையாளம் கண்டு அவர்களை பற்றிய தகவல்களை சுகாதார நிலையங்களுக்கு தெரிவித்து பெரும் தொண்டாற்றினர். நோய் தொற்றின் போது வெளியில் வரவே பயப்பட்ட காலகட்டத்தில் இவர்களது சேவை மிகவும் பாராட்டப்பட்டது.
மேலும் ஆஷா பணியாளர்கள் மகப்பேறு, குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துதல், காசநோய் ஒழிப்பு போன்ற பணிகளிலும் ஈடுபட்டு பணியாற்றி வருகின்றனர்.இந்நிலையில் ஜெனீவா நாட்டில் 75வது உலக சுகாதார அமைப்பின் மாநாடு நடைபெற்றது. இவ்விழாவில் உலக சுகாதாரத்துக்காக தலைமைப் பண்புடன் பணியாற்றிய மற்றும் பிராந்திய சுகாதார பிரச்சினைகளை சரி செய்ய அர்ப்பணிப்புடன் பாடுபட்ட ஆஷா பணியாளர்கள் விருது வழங்கி பாராட்டப்பட்டார்கள்.
இவ்விழாவில் ஆஷா பணியாளர்களை கவுரவிக்கும் விதமாக உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் டெட்ராஸ் ஆதனம் 6 விருதுகளை அறிவித்தார். அதில் இந்தியாவைச் சேர்ந்த 10 லட்சம் ஆஷா தன்னார்வ பெண் தொண்டர்களுக்கும் ஒரு விருது வழங்கப்பட்டது.விருது பெற்ற 10 லட்சம் ஆஷா தொண்டர்கள் பேரிடர் காலமான கொரோனா தொற்றின் போது மக்களுக்கு சேவை செய்யும் நோக்கத்துடன் பணியாற்றிதற்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. விருது பெற்றவர்களுக்கு வாழ்த்துகள் வந்த வண்ணம் உள்ளன.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.