11அம்ச கோரிக்கை வலியுறுத்தி மோடி அரசை கண்டித்து, AITUC சார்பில் ஆர்ப்பாட்டம்.
தேனி மாவட்டம் தேனி பழைய பேருந்து நிலையம் அருகில் AITUC மாநில நிர்வாக குழு முனுசாமி அவர்கள் தலைமையில் ஆர்ப்பாட்டம் ஊர்வலமாக துவங்கியது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் போராடி பெற்ற 44 சட்டங்களை 4 சட்ட தொகுப்புகளாக சுருக்கிய மோடி அரசை கண்டித்தும், பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரைவாத்து கொடுத்த கார்ப்பரேட் முதலாளிகளுக்கு ஆதரவாக செயல்படுகின்ற மோடி அரசின் தனியார் மைய கொள்கைகளை எதிர்த்தும்.
சிறு குறு நடுத்தர தொழில்கள் முடக்கப்பட்டு ஆலைகள் மூடப்பட்டு தொழிலாளர்கள் வேலை இழக்கும் கொடுமைகளை கண்டித்தும்.
தொழிலாளர்களுக்கு நலவாரிய நிதிகளை உயர்த்தி பதிவிற்கான வழிமுறைகளை எளிமைப்படுத்திட வேண்டிய உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பின்னர் அங்கிருந்து நேரு சிலை அருகே வரும் போதுசாலை மறியலில் ஈடுபட்டவர்களை அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை கைது செய்து வாகனத்தில் ஏற்றி தனியார் மண்டபத்திற்கு அழைத்துச் சென்றனர்.