உடுமலை தேர்த்திருவிழா நிறைவடைந்து, இரு மாதமாகியும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படாமல், மழையிலும், வெயிலிலும் வீணாகி வருகிறது.

உடுமலை தேர்த்திருவிழா நிறைவடைந்து, இரு மாதமாகியும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படாமல், மழையிலும், வெயிலிலும் வீணாகி வருகிறது.உடுமலையில் மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா, பிரசித்தி பெற்றதாகும். ஏறத்தாழ, 300 ஆண்டு பழமையான தேரில் எழுந்தருளி, தேர் வீதிகளில் உலா வந்து, பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் நிகழ்ச்சி நடந்து வருகிறது.
கடந்த, ஏப்., 21ம் தேதி, தேர்த்திருவிழா நடந்தது. வழக்கமாக, திருவிழா நிறைவடைந்ததும், தேர்நிலையில், உள்ள தேரை, இரும்பு கூரை கொண்டு, வேயப்பட்டு முழுமையாக பாதுகாக்கப்படும்.தேர்த்திருவிழா நிறைவடைந்து, இரு மாதமாகியும், பழமையான முழுமையாக மரத்தினால் உருவாக்கப்பட்ட தேர் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படாமல், வெயிலில் காய்ந்தும், மழையில் நனைந்தும் வீணாகி வருகிறது.தற்போது, 50 லட்சம் ரூபாய் செலவில், புதிய தேர் தயாராகி வரும் நிலையில், பழைய தேரை முறையாக பாதுகாக்கவும், பராமரிக்கவும், தேர்த்திருவிழாவின் போது, ஆய்வுக்கு வந்த அறநிலையத்துறை அமைச்சர் மற்றும் உயர் அதிகாரிகள் அறிவுறுத்தியிருந்தனர்.ஆனால், அதிகாரிகள் கண்டு கொள்ளாமல்,
தற்போது பாதுகாப்பு இல்லாமல், பிரதான ரோட்டில் காணப்படுகிறது. வெயில், மழை மட்டுமின்றி, திறந்த நிலையில் தேர் உள்ளதால், அசம்பாவித சம்பவங்கள் ஏற்படும் அபாயமும் உள்ளது.எனவே, பாரம்பரியமும், பழமையும் கொண்ட, இந்த தேரை பாதுகாக்கவும், முறையாக பராமரிக்கவும் மாரியம்மன் கோவில் நிர்வாகமும், அறநிலையத்துறை உயர் அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.