BREAKING NEWS

13 மாவட்டங்களில் இடி மின்னலுடன் வெளுத்து வாங்கப் போகும் கனமழை.

13 மாவட்டங்களில் இடி மின்னலுடன் வெளுத்து வாங்கப் போகும் கனமழை.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக நிலவி வரும்  மேலடுக்கு  வளிமண்டல  சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அந்த வகையில் இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருப்பத்தூர், வேலூரில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மழை

ஜூன் 19, 20, 21, 22 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி, மின்னலுடன் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது.

சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 33-34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் என்று தெரிவித்துள்ளது.

இன்றும், நாளையும் தமிழக கடலோரப் பகுதிகள்,மன்னார் வளைகுடா,குமரிக்கடல் பகுதி,இலட்சத்தீவு பகுதி மற்றும் அதனை ஓட்டிய தென்கிழக்கு அரபிக்கடல்,கேரளா – கர்நாடக கடலோரப் பகுதிகள், மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் குறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கி லோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் குறிப்பிட்ட தேதிகளில் அப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

 

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )