133 பேரை பலி வாங்கிய சீன விமான விபத்து!
133 பேரை பலி வாங்கிய சீன விமான விபத்து!
சீனாவின் ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான போயிங் 737 ரக விமானம் அந்நாட்டின் குன்மிங் நகரில் இருந்து குவாங்சூ மாகாணத்தில் உள்ள வுஜோ நகருக்கு கடந்த மார்ச் 21-ம் தேதி புறப்பட்டது. அந்த விமானத்தில் 133 பேர் பயணித்தனர்.
விமானம் குவாங்சி மாகாணத்தில் உள்ள மலை பகுதியில் பறந்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக மலைமீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானத்தில் பெரும் தீ விபத்து எற்பட்டது. இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 133 பயணிகளுமே உயிரிழந்தனர். இந்த சம்பவம் அந்நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்த விமான விபத்து குறித்து விமான நிபுணர்களும், போலீசாரும் தீவர விசாரணை மேற்கொண்டர். இந்த நிலையில், அவர்களுக்கு உதவுவதற்காக அமெரிக்காவை சேர்ந்த நிபுணர்களும் சென்று இருந்தனர். இதனைத் தொடர்ந்து, விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்புப் பெட்டிகள் கைப்பற்றப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில், இந்த விமான விபத்து வேண்டுமென்றே நடத்தப்பட்டிருப்பதாக அமெரிக்க நிபுணர்களை தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் கூறுகையில், 29 ஆயிரம் அடி உயரத்தில் பறந்துக் கொண்டிருந்த விமானம், பாதையில் இருந்து விலகியதை கவனித்த கட்டுப்பாடு அறை அதிகாரிகள் விமானிகளை தொடர்பு கொள்ள முயன்றனர். ஆனால் விமானிகளிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை. விமானத்திலும் எந்த கோளாறும் இல்லை. இதை வைத்து பார்க்கும் போது இந்த விபத்து வேண்டுமென்றே நடத்தப்பட்டதாக சந்தேகம் எழுந்துள்ளது என்று தெரிவித்தனர்.