13500 மக்கள் நலப் பணியாளர்கள் அதிமுக ஆட்சியில் பணியில் இருந்து நீக்கப்பட்டனர்.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியால் பணியமர்த்தப்பட்ட சுமார் 13500 மக்கள் நலப் பணியாளர்கள் அதிமுக ஆட்சியில் பணியில் இருந்து நீக்கப்பட்டனர்.
அவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு தமிழ்நாடு முதலமைச்சர் மக்கள் நலப் பணியாளர்களை மீண்டும் பணி நியமனம் செய்திட உத்தரவிட்டதைத் தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த மக்கள் நல பணியாளர்கள் இன்று பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா M.முருகனை நேரில் சந்தித்து முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்தனர்கள்.
