BREAKING NEWS

1,410 கிலோ எடையுள்ள காரை தலைமுடியால் கட்டி இழுத்து அரசு பள்ளி மாணவி உலக சாதனை.

1,410 கிலோ எடையுள்ள காரை தலைமுடியால் கட்டி இழுத்து அரசு பள்ளி மாணவி உலக சாதனை.

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருபவர் சம்யுத்தா (12). இவர் தனது தலைமுடியில் 1,410 கிலோ எடையுள்ள காரை கட்டி 110 மீட்டர் தூரத்தை, ஒரு நிமிடம் 10 நொடியில் இழுத்துச் சென்று வேர்ல்டு ரெக்கார்டு யூனியன் அபிஷியல் சாதனை படைத்தார். ரெக்கார்டு ஆபீசர் சரிபா மேற்பார்வையில் இந்த சாதனை பதிவு செய்யப்பட்டது .


இவர் இதற்கு முன் தனது பத்தாவது வயதில் 9,90 கிலோ எடையுள்ள காரை 112.2 மீட்டர் தூரத்தை, ஒரு நிமிடம் 46 நொடியில் தலைமுடியில் கயிற்றால் காரைக்கட்டி இழுத்துச் சென்று இந்தியன் ரெக்கார்டும், ஆசிய ரெக்கார்டும் பெற்றுள்ளார்.

இந்திய அளவில் இந்த மாணவி மட்டுமே இந்த சாதனை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த உலக சாதனை புரிந்த இந்த பள்ளி மாணவி, அவரது பயிற்சியாளரான கராத்தே மாஸ்டர் இளையராஜா ஆகிய இருவரையும் பள்ளி ஆசிரியர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )