BREAKING NEWS

17 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட மின்மாற்றியை சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ துவங்கி வைத்து.

17 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட மின்மாற்றியை சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ துவங்கி வைத்து.

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம்

 

கோவில்பட்டி அருகே 17 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்ட மின்மாற்றியை முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ துவங்கி வைத்து.

 

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட லில்லிச்சேரி கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் நீண்ட நாள் கோரிக்கையான மின்மாற்றிய அமைக்க கோரிக்கை விடுத்ததை தொடர்ந்து இரண்டு மின்மாற்றிகளை அமைப்பதற்கு சுமார் 17.7 லட்சம் மதிப்பிலான திட்டத்தில்,..

 

 

16 விவசாய மின் இணைப்பு மற்றும் குடிநீர் மின் இணைப்பு செய்யப்பட்டதை தொடர்ந்து குடியிருப்புகளில் சீரான மின்சாரம் வழங்கும் வகையில் மின்மாற்றி அமைக்கப்பட்டுள்ளது புதியதாக அமைக்கப்பட்ட மின்மாற்றியை முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு துவங்கி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.

இவ்விழாவில் கோவில்பட்டி உதவி செயற் பொறியாளர் தங்கராஜ், நாலாட்டின்புத்தூர் உதவி மின் பொறியாளர் பொன்ராஜா, கோவில்பட்டி உதவி மின் பொறியாளர் முருகேசன்,மாநில பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன்,

 

 

பஞ்சாயத்து தலைவர் வேலன்,ஆவின் பால் கூட்டுறவு தலைவர் தாமோதரன், எட்டயபுரம் நகர செயலாளர் ராஜ்குமார், நகர் மன்ற உறுப்பினர் கவியரசன், முன்னாள் ஒன்றிய செயலாளர் போடு சாமி, கழக நிர்வாகிகள்ராமசுப்பு, வேல்ராஜ்,அழகர்சாமி, கோபி, பழனி குமார், முருகன்,உள்பட பலர் கலந்து கொண்டனர்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )