2 வது நாளாகத் தொடரும் வேலைநிறுத்த போராட்டம்!! பல கோடி வர்த்தகம் பாதிப்பு!!
2 வது நாளாகத் தொடரும் வேலைநிறுத்த போராட்டம்!! பல கோடி வர்த்தகம் பாதிப்பு!!
தமிழகத்தில் திருப்பூர் , கோவை மாவட்டங்களில் பிரதான தொழில் விசைத்தறிகள் . இங்கு தயாராகும் ஆடைகள் தமிழகத்தின் மற்ற பகுதிகள், இந்தியா வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன. பருத்தி, நூல்கள் தான் ஜவுளிகள் தயாரிப்பிற்கு ஆதாரம். இதன் விலைகள் வரலாறு காணாத அளவு உச்சம் தொட்டுள்ளது. இதனை குறைக்க வலியுறுத்தி பல முறை மத்திய மாநில அரசுகளுக்கு அறிக்கை சமர்ப்பித்தனர். எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் திருப்பூர் கோவை மாவட்ட விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இங்கு அமைந்துள்ள 2 லட்சம் விசைத்தறிகளுக்கு ஜவுளி உற்பத்தியாளர்கள் பாவு நூல் கொடுத்து அதை துணியாக மாற்றி விற்பனை செய்து வருவார்கள். இந்நிலையில், கடந்த சில மாதங்களாகவே பருத்தி மற்றும் நூல் விலை கடுமையாக உயர்ந்து காணப்படுகிறது. இதனால் பின்னலாடை மற்றும் அது சார்ந்து இயங்கும் ஜாப் ஒர்க் உட்பட பல்வேறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளன.
நூல் விலை ஏற்றத்தை கட்டுக்குள் கொண்டு வர வலியுறுத்தி திருப்பூர், கோவை மாவட்ட ஜவுளி உற்பத்தியாளர்கள் இன்று 2ம் நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டத்தால் 3 லட்சம் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டிருப்பதுடன் மேலும் 2 லட்சம் விசைத்தறிகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த போராட்டம் தொடர்ந்து 15 நாட்கள் அதாவது ஜூன் 5 வரை தொடரும் என உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த வேலை நிறுத்தத்தால் ஒரு நாளை சுமார் 100கோடி ஜவுளி உற்பத்தி வர்த்தகம் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கடந்த 16ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின், பருத்தி நூல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் தமிழகத்தில் ஜவுளித்தொழில் முடங்கி வருவதை எடுத்து கூறி அதற்கு உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வலியுறுத்தி பிரமதர் மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதி அனுப்பினார்.நூல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், கடந்த சில மாதங்களாகவே பின்னலாடை மற்றும் அது தொடர்பான ஜாப் ஒர்க் உள்ளிட்ட பல்வேறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இன்று முதல் கோவை, திருப்பூர் மாவட்டங்களை சேர்ந்த ஜவுளி உற்பத்தியாளர்கள் முழுமையாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். நூல் விலை ஏற்றத்தை கட்டுக்குள் கொண்டு வரவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்த வேலை நிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.இதைத்தொடர்ந்து வருகிற ஜூன் மாதம் 5ம்தேதி 15 நாட்களுக்கு வேலை நிறுத்தம் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக உற்பத்தியாளர்கள் தரிவித்துள்ளனர். ஜவுளி உற்பத்தியாளர்களின் இந்த வேலை நிறுத்தத்தின் காரணமாக தினசரி ரூ.100 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படும் என்று அஞ்சப்படுகிறது.
திருப்பூர் மற்றும் கோவை ஆகிய 2 மாவட்டங்களிலும் மொத்தம் 2 லட்சம் எண்ணிக்கையிலான விசைத்தறிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த விசைத்தறிகளுக்கு ஜவுளி உற்பத்தியாளர்கள் பாவு நூல் கொடுத்து அதை துணியாக மாற்றி விற்பனை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.வேலை நிறுத்தம் காரணமாக நூற்பாலைகள் மற்றும் ஜவுளி உற்பத்தியாளர்கள் மற்றும் பணியாளர்கள் என அனைவரின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டு அவர்களின் தொழில்கள் முடங்கும் பரிதாப சூழ்நிலை உருவாகி உள்ளது.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.