BREAKING NEWS

200 இருளர்இன பயனாளிகளுக்கு 1 கோடியே 44 லட்சம் மதிப்பில் இலவச வீட்டுமனை பட்டாவினை பால்வளத்துறை அமைச்சர் வழங்கினார்.

200 இருளர்இன பயனாளிகளுக்கு 1 கோடியே 44 லட்சம் மதிப்பில் இலவச வீட்டுமனை பட்டாவினை பால்வளத்துறை அமைச்சர் வழங்கினார்.

திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியம் அதிகத்தூர் ஏகாட்டூர் பிஞ்சுவாக்கம் நயப்பாக்கம் கடம்பத்தூர் திருப்பாச்சூர் கண்ணம்மாபேட்டை தொடுகாடு உள்ளிட்ட கிராமங்களைச் சார்ந்த 200 இருளர் இன மக்கள் மற்றும் 17 பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் குடும்பம் உள்ளிட்ட 217 பயனாளிகளுக்கு 1 கோடியே 43 லட்சத்து 73 ஆயிரத்து 110 ரூபாய் மதிப்பில் இலவச வீட்டு மனை பட்டா விலை பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா மு.நாசர் வழங்கினார்.

திருவள்ளூர் வட்டாட்சியர் செந்தில்குமார் ஏற்பாட்டில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஆபிஜான் வர்கீஸ் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தொடுகாடு ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் 200 இருளர் இன குடும்பங்களுக்கு வருவாய்த்துறை சார்பில் 8 ஏக்கர் 45 சென்ட் இடத்தை அளவீடு செய்து பயனாளிகளுக்கு ஒப்படைக்கப்பட்டது.

மேலும் திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் வீ.ஜி.ராஜேந்திரன், திருவள்ளூர் சார் ஆட்சியர் மகாபாரதி, மாவட்ட வருவாய் அலுவலர் அசோகன், ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இலவச பட்டா வழங்கும் நிகழ்ச்சியில் 217 பயனாளிகள் கலந்து கொண்டு தங்களின் இலவச பட்டாக்களை பெற்று சென்றனர்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )