BREAKING NEWS

2024 பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு ஆண்டிபட்டியில் துணை ராணுவப்படையினர், காவல்துறையினர் அணிவகுப்பு பேரணி நடைபெற்றது.

2024 பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு ஆண்டிபட்டியில் துணை ராணுவப்படையினர், காவல்துறையினர் அணிவகுப்பு பேரணி நடைபெற்றது.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் தேர்தல் பதற்றத்தை தணிக்கும் வகையில், துணை ராணுவப் படை, மற்றும் காவல்துறை அணிவகுப்பு நடைபெற்றது.இந்த அணிவகுப்பை ஆண்டிபட்டி காவல்துறை துணை கண்காணிப்பாளர் சண்முகசுந்தரம் துவக்கி வைத்தார்.மேலும் இந்த அணிவகுப்பில் வஜ்ரா வாகனத்துடன் ஏராளமான காவல்துறையினர், துணை ராணுவப் படையினர் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 19 தேதி நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன.
இந்நிலையில் வாக்காளர்கள் சுதந்திரமாக வாக்களிக்கவும், பதற்றத்தை தணிக்கவும் தேனி மாவட்டம் ஆண்டிபட்டி நகர் பகுதியில் துணை ராணுவப் படையினர் மற்றும் காவல்துறையினர் அணிவகுப்பு நடைபெற்றது. இந்த அணிவகுப்பானது கொண்டம்மநாயக்கன்பட்டி சோதனைச்சாவடி முன்பாக தொடங்கி தேனி மதுரை தேசிய நெடுஞ்சாலையில் ஆண்டிபட்டி பேருந்து நிலையம் எம்ஜிஆர் சிலை, தேவர் சிலை வழியாக முக்கிய வீதிகளின் வழியாக பழைய முருகன் தியேட்டர் முன்பு முடிவடைந்தது.

Share this…

CATEGORIES
TAGS