25 வருடங்களாக பிரிந்து வாழ்ந்து வந்த முதியவரை அவரது குடும்பத்துடன் இணைத்த நத்தம் சேவை நண்பர்கள் குழு இளைஞர்கள்!!

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியில் உள்ள காந்திஜி கலையரங்கத்தில் வயதான முதியவர் பாலுச்சாமி ஐயா கடந்த சில ஆண்டுகளாக வாழ்ந்து வருகிறார். அவருக்கு இளைஞர்கள் சிலர் பல வருடங்களாக உணவுகள் வழங்கி வருகிறார்கள்.
அவருடைய முழு விவரங்களை விசாரித்த பிறகு அவர் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் எனவும் அவருக்கு குடும்பம் உள்ளது எனவும் கண்டுபிடிக்கப்பட்டது. பிறகு சமூக வலைதளங்கள் மூலமாக அவரது குடும்பத்தை கண்டறிந்து தொடர்பு கொண்டு அவரது மகன்களையும் நேரில் அழைத்து,
நத்தம் காவல்துறை அதிகாரிகள் மற்றும் வழக்கறிஞர்கள் முன்னிலையில் பாலுச்சாமி ஐயாவை அவர்களின் குடும்பத்துடன் ஒப்படைத்த சேவை நண்பர்கள் குழு இளைஞர்கள். பல வருடங்கள் கழித்து பார்த்துக்கொண்ட தந்தை, மகன் இருவரும் ஆனந்தக் கண்ணீரோடு அவர்களின் இருப்பிடம் நோக்கி புறப்பட்டனர்கள்.