மர்மமான முறையில் வயல்வெளியில் ரத்த காயங்களுடன் ஆட்டோ ஓட்டுனர்.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள மிளகனூர் கிராமத்தைச் சேர்ந்த பெரியண்ணன்
வள்ளியம்மை தம்பதியரின் மகன் செந்தில்குமார் (45) இவர் மிளகனூரை சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டும் தொழில் செய்து வந்தார்
தினமும் இவரது கிராமத்தில் இருந்து மானாமதுரைக்கு ஆட்டோவில் வந்து செல்வது வழக்கம் இந்த நிலையில் பீசர்பட்டினம் அருகே வயல்காட்டில் செந்தில்குமார் என்பவர் இறந்து கிடப்பதாக மானாமதுரை காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது
உடனே சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மானாமதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து மானாமதுரை காவல்துறையினர் வழக்கு பதிவுசெய்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
