`29.5 கோடியை ஏழு நாட்களுக்குள் செலுத்த வேண்டும்’- தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பிய டோல்கேட் நிர்வாகம்!

கப்பலுார் சுங்கச்சாவடியை அரசு பேருந்துகள் பயன்படுத்தியதற்காக 29.5 கோடி தமிழக அரசு செலுத்த வேண்டும் என்று கப்பலூர் சுங்கச்சாவடி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
மதுரை மாவட்டம், திருமங்கலத்தை அடுத்துள்ள கப்பலுார் சுங்கச்சாவடியை நீக்க வேண்டும் என்றும், உள்ளூர் வாகன ஓட்டிகளிடம் அதிக கட்டணம் வசூலிப்பது தொடர்பாகவும் ஏற்கெனவே பிரச்சினை நீடிக்கிறது. முற்றிலுமாக கட்டண விலக்கு அளிக்க வேண்டும் அல்லது சுங்கச்சாவடியை இடமாற்றம் செய்ய வேண்டும் என 12 ஆண்டுகளுக்கும் மேலாக திருமங்கலம், கப்பலுார், டி.கல்லுப்பட்டி, பேரையூர் பகுதி வாகன ஓட்டிகள் போராடி வருகின்றனர்.
