3 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை – நிதானமாக குற்றவாளியை கைது செய்த போலீசார்!

3 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை – கட்டப்பஞ்சாயத்து செய்து குற்றவாளியை காப்பாற்ற முயன்ற காட்பாடி சிஎஸ்ஐ நிர்வாகிகள்: நிதானமாக குற்றவாளியை கைது செய்த போலீசார்!
காட்பாடி காவல் நிலையம் எதிரே உள்ள சிஎஸ்ஐ ஆலயத்தில் மூன்றரை வயது சிறுமிக்கு 10வது படிக்கும் மாணவன் பாலியல் தொல்லை ஏற்படுத்திய நிலையில் அதை நிர்வாகிகள் மூடி மறைக்க கட்டப்பஞ்சாயத்து செய்துள்ளார்கள்.
ஆனாலும் இது தொடர்பாக காட்பாடி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு நிதானமாக அந்த மாணவனை கைது செய்தனர் போலீசார்.
வேலூர் மாவட்டம், காட்பாடி காவல் நிலையம் மற்றும் சிஎஸ்ஐ தேவாலயம் எதிர் எதிரே உள்ளன. அந்த தேவாலயத்தில் பலர் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த 1-ம் தேதி அங்கு பணிபுரிவரின் பெண் குழந்தை (மூன்றரை வயது) சிஎஸ்ஐ தேவாலயத்தில் விளையாடிக் கொண்டுள்ளது.
அங்கு பணிபுரியும் மற்றொரு ஊழியரான ஜான்சன் என்பவரின் மகன் காட்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 10வது படித்து வருகிறார்.
அந்த மாணவன் பெண் குழந்தையை தனியாக அழைத்துச் சென்று அவரது ஆடைகளை களைந்து விட்டு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இந்த சம்பவம் பற்றி குழந்தையின் பெற்றோர்களுக்கு தெரியவந்ததும் அவர்கள் பதறி போனார்கள்.
இந்த விஷயத்தை பெரிது படுத்தாமல் இருக்க தேவாலயத்தின் குருசேகர குழுவினர் அவசரமாக கூடி விவாதித்தனர். இந்நிலையில் அந்த காமுகனுக்கு ஆதரவாக தேவாலய நிர்வாகிகள் 4 பேர் செயல்பட்டிருக்கிறார்கள்.
இதை அறிந்த பெற்றோர் அந்த நிர்வாகிகளை காரி உமிழாத குறையாக வசை பாடினார்களாம்.
இந்த விவகாரம் காவல் நிலையத்துக்கு எட்டியவுடன் அவர்கள் நேர்மையாக விசாரித்திருக்கிறார்கள். எந்த பிரச்சனை என்றாலும் போலீசில் தானே தெரிவிக்க வேண்டும்.
நீங்களே கட்டப்பஞ்சாயத்து செய்து தீர்த்துக் கொள்ளக்கூடிய குற்றமா? இது என்று கண்டித்ததுடன், பெற்றோரிடம் புகார் பெற்று போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
சமீப காலமாக சில டுபாக்கூர் ரவுடிகள் தன்னை பெரிய ஆளாக காட்டிக் கொண்டு பல்வேறு கட்டப்பஞ்சாயத்து செய்வதும், மாவட்ட காவல் அதிகாரிகளின் பெயரை பயன்படுத்தி பலரை மிரட்டுவதுமாக உள்ளார்கள்.
சம்மந்தப்பட்ட நிர்வாகம் அது போன்ற டுபாக்கூர்களை அடையாளம் கண்டு ஒதுக்கினால் நலம். ஏனென்றால் அது போன்ற நபரின் பெயர் காவல் துறை உளவுத்துறையின் பட்டியலில் சென்னை வரைக்கும் உள்ளது.
உறுதிப்படுத்திக் கொள்ள விசாரித்து தெரிந்து கொள்ளவும்.
தேவாலய கமிட்டியைச் சேர்ந்தவர்களால் கட்டப்பஞ்சாயத்து செய்துள்ளதாக கூறப்படுகிறது.
அந்தப் பெண் குழந்தை என் தந்தை அந்த நான்கு ரவுடிகளால் மிரட்டலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆனால் பெண் குழந்தையின் பெற்றோர் காட்பாடி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் தற்போது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மூன்றரை வயது குழந்தைக்கு பத்தாவது படிக்கும் மாணவன் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேற்படி சிறுவனின் தந்தை ஜான்சன் ஏற்கனவே இரண்டு மனைவி சர்ச்சை தொடர்பாக நிர்வாகத்தினரால் ஆறு மாதம் சஸ்பெண்ட் செய்யப்பட்டவர்.
இதே போன்று காணிக்கை பணத்தை திருடி இரண்டு முறை பணியிடை நீக்கம் செய்யப்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போது மீண்டும் அவர் பணியமர்த்தப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவரது மகன் கைது செய்யப்பட்டு செங்கல்பட்டு சிறுவர் சீர்திருத்த பள்ளியில் 8-ம் தேதி இரவு அடைக்கப்பட்டார்.
இந்த மூன்றரை வைத்து சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் உடனடியாக நடவடிக்கை எடுத்து பள்ளி சிறுவன் என்று கூட பாராமல் கைது செய்து நீதியை நிலை நாட்டிய வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணனை சமூக அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் மனதார பாராட்டி மகிழ்கின்றனர். கருணையின் நிறம் காக்கி என்பதற்கு இதுவும் ஒரு உதாரணம் என்றே கூறலாம்.
செய்தி ஆசிரியர் ச.வாசுதேவன்