30 ஆண்டுகளுக்கு முன் அறிமுகப்படுத்தப்பட்ட மாஸ்டர் பிளான் திட்டத்தை மாற்ற நடவடிக்கை
நீலகிரி உட்பட மலை மாவட்டங்களில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் அறிமுகப்படுத்தப்பட்ட மாஸ்டர் பிளான் திட்டத்தை இன்றைய நடைமுறைக்கேற்ப மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என வசதி மற்றும் நகர்ப்புறத்துறை மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் முத்துசாமி உதகையில் பேட்டி.
நீலகிரி மாவட்டம் உதகை அரசு தமிழகம் மாளிகையில் நீலகிரி மாவட்டத்தில் கட்டிட அனுமதி வழங்குவது தொடர்பாக வீட்டு வசதி மற்றும் நகர்ப்புறத்துறை மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் முத்துசாமி, சுற்றுலா துறை அமைச்சர் ராமச்சந்திரன், நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா ஆகியோர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.