3175 நபர்களுக்கு இன்று 11 கோடியே 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் இன்று வழங்கப்பட்டுள்ளது. அமைச்சர் கே.என் நேரு :

திருச்சி: நரிக் குறவர்களின் நீண்ட காலமாக கோரிக்கை வைத்திருந்த இலவச வீட்டு மனை பட்டா 59 நபர்களுக்கு இன்று வழங்கப்பட்டுள்ளது – துறையூர் பகுதியில் ஆய்வு செய்ய சென்றபோது நரிக்குறவர்கள் தங்களுக்கு கடனுதவி வேண்டுமென்று கேட்டிருந்தனர் – இதில் 10 நபர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் கடன் உதவி வழங்கவும் வழிவகை செய்துள்ளோம்.

இலவச மின்சாரம் குறித்து ஒரு லட்சம் இலவசம் மின்சாரம் கடந்த ஆறு மாதத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது,
இரண்டாவது பட்ஜெட்டில் 50 ஆயிரம் புதிய மின் இனைப்பு வழங்க அறிவிக்கப்பட்டுள்ளது. பயிற்காப்பீட்டில் விவசாயிகளுக்கு ஆர்வம் குறைந்து உள்ளது என்பதில் உண்மை இல்லை – பயிர்காப்பீட்டு திட்டம் குறித்து வற்புறுத்துகிறோம் விழிப்புணர்வை தருகிறோம் பயிர் காப்பீடு செய்வதும் செய்யாததும் அது அவர்கள் கையில் தான் உள்ளது.

பயிற்காப்பீட்டு திட்டத்தை தாங்கள் செய்ய வேண்டிய கடமையாகவே விவசாயிகள் வைத்துள்ளனர் – எனவே அதைப் பற்றி விவசாயிகளுக்கு ஆர்வம் இல்லை என்று கூற முடியாது. காவிரியில் 1.35 லட்சம் கன அடி தண்ணீர் வந்த காரணத்தால் மட்டுமே கொள்ளிடத்தில் தண்ணீர் திறக்கப்பட்டது – கொள்ளிடத்தில் தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளதால் 28 ஏரிகள் நிரப்பி உள்ளோம்.
கிளை வாய்க்கால்களில் முழுவதிலும் தண்ணீர் திறப்பதற்கு ஏற்பாடு செய்து வருகிறோம் – ஒரு மாதத்திற்கு பிறகு விவசாயிகள் ஒரு போகத்திற்கான ஏற்பாடுகளை செய்வார்கள்,எனவே அந்த நேரத்தில் சரியாக நாங்கள் தண்ணீரை வழங்கி விடுவோம்.
