பேரணாம்பட்டில் பெருகிவரும் நாய் தொல்லைகள், கராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை.

வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டில் பெருகிவரும் நாய் தொல்லைகள், கராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை.
பேரணாம்பட்டு நகராட்சியில் 21 வார்டுகள் உள்ளன இந்த 21 வார்டுகளிலும் தெரு நாய் தொல்லைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது நேற்று 8.9.2022 அன்று பெரிய மஜித் தெருவை சேர்ந்த 3 மாணவர்களை வெறிநாய் கடித்து கொதறி உள்ளது.
இதனால் அலறிப்போன பெற்றோர்கள் பேரணாம்பட்டு அரசு மருத்துவமனையில் கொண்டு சென்று சேர்த்தனர்.
இதனால் பெற்றோர்கள் பீதி அடைந்துள்ளனர் இனிவரும் காலங்களிலாவது இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க பேரணாம்பட்டு நகர மன்ற தலைவர் வி பிரேமா வெற்றிவேல் நகர மன்ற துணைத் தலைவர் ஆழியார் அகமது நகராட்சி ஆணையாளர் சுபாஷினி ஆகியோர்கள் பெருகி வரும் நாய் தொல்லைகளை கட்டுப்படுத்த அவசரமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று பேரணாம்பட்டு பொதுமக்கள் தரப்பில் எதிர்பார்க்கப்படுகிறது.