BREAKING NEWS

35 40 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தேர்வு மையங்கள் போடப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டிய தேர்வாளர்கள் வெகு நேரம் காத்திருந்து விட்டு திரும்பி சென்றனர்.

35 40 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தேர்வு மையங்கள் போடப்பட்டுள்ளதாக  குற்றம் சாட்டிய தேர்வாளர்கள் வெகு நேரம் காத்திருந்து விட்டு திரும்பி சென்றனர்.

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு 9.15 மணிக்கு பிறகு வந்தவர்கள் அனுமதிக்கப்படவில்லை அருகாமையில் உள்ள தேர்வு மையங்களுக்கு பதிலாக 35 40 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தேர்வு மையங்கள் போடப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டிய தேர்வாளர்கள் வெகு நேரம் காத்திருந்து விட்டு திரும்பி சென்றனர்.

 

 

தமிழ்நாடு முழுவதும் இன்று டிஎன்பிஎஸ்சி குரூப் -4 தேர்வு நடைபெறுகிறது. மாநிலம் முழுவதும் 22 லட்சம் பேர் குரூப் -4 தேர்வு எழுதுகின்றனர். இதில் தஞ்சாவூர் மாவட்டத்தில் 239 தேர்வு மையங்களில் 67728 பேர் குரூப் -4 தேர்வு எழுதுகின்றனர். காலை 9:30 மணிக்கு தேர்வு தொடங்கிய நிலையிலேயே தஞ்சையில் பல தேர்வு மையங்களுக்கு தேர்வாளர்கள் 9.15 மணிக்கு பிறகு வந்ததால் தேர்வு எழுத அனுமதிக்கப்படவில்லை தேர்வு மையங்கள் 35, 40 கிலோமீட்டர் தொலைவில் போடப்பட்டுள்ளதாகவும்,

 

 

ஒரத்தநாடு உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து தேர்வு மையங்களுக்கு வரவே வெகு நேரம் ஆனதாகவும் ஹால் டிக்கெட்டில் 9.30 மணி என போடப்பட்டுள்ளது ஆனால்9.15 மணிக்கு வந்தாலும் தேர்வு மையங்களுக்குள் அனுமதிக்காததால் தங்களால் தேர்வு எழுத முடியவில்லை எனக் கூறிய தேர்வாளர்கள் வெகு நேரம் காத்திருந்து விட்டு திரும்பி சென்றனர்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )