4 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டு வரும் வெட்டாறு தடுப்பணை தரம் இல்லாமல் கட்டப்பட்டுள்ள தடுப்பணையை ஆய்வு செய்ய வேண்டும் என வலியுறுத்தி தடுப்பணை மீது ஏறி நின்று விவசாயிகள் போராட்டம் நடத்தினார்கள்.

தஞ்சை மாவட்டம் காவலூர் வெட்டாறு குறுக்கே 4 கோடி ரூபாய் மதிப்பில் தடுப்பணை கட்டும் பணி நடந்து வருகிறது. பணி தொடங்கப்பட்ட காலத்தில் இருந்து முறையாக ஆழம் படுத்தாமல், உரிய அளவிற்கு ஜல்லி, மணல், கம்பிகள் கட்டாமல் பணிகள் நடப்பதாக விவசாயிகள் குற்றம்சாட்டி வந்தனர்.
இந்த நிலையில் பாசனத்திற்கு கல்லணையில் தண்ணீர் திறக்கப்பட்டதால் பணியை முழுமைப்படுத்தாமல் நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் கட்டப்பட்டு வரும் தடுப்பணை தரமற்ற முறையில் தடுப்பனை இருப்பதால் ஆற்றில் முழு கொள்ளளவு தண்ணீர் வரும் போது இடிந்து விழும் நிலை உள்ளது.
எனவே தடுப்பணையை முழுமையாக ஆய்வு செய்து தரமற்ற முறையில் கட்டிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி விவசாயிகள் தடுப்பணை மீது ஏறி நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.