BREAKING NEWS

40 வருடங்களாக சேரும் சகதியும் கலந்த குடிநீர் வருவதால் நோய் தொற்று என கிராம மக்கள் சார்பில் கோரிக்கை

உதகை அருகே பிக்கட்டி சிவசக்தி நகர் கிராம பகுதியில் கடந்த 40 வருடங்களாக சேரும், சகதியும் கலந்த குடிநீரை பயன்படுத்தி வருவதால் நோய் தொற்று ஏற்படுவதாக பாதிப்படைந்த கிராம மக்கள் நூதன முறையில் கலங்கிய தண்ணீரை தலையில் சுமந்தபடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்தனர், தங்கள் கிராம பகுதிக்கு தூய்மையான குடிநீர் வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது…

நீலகிரி மாவட்டம் குந்தா தாலுக்காவிற்கு உட்பட்ட பிக்கட்டி சிவசக்தி நகர் பகுதியில் சுமார் 200 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்த கிராமத்திற்கு கடந்த 40 ஆண்டுகாலமாக கிராமமக்கள் குடிநீராக பயன்படுத்தி வரும் தண்ணீர் கொடமரா தடுப்பணையில் வருவதாகவும், அந்த தடுப்பணையை சுற்றி தேயிலை தோட்டங்களும், மலைக்காய்கறிகள் விவசாய நிலங்களும் இருப்பதால் தங்கள் ஊருக்கு வரக்கூடிய குடிநீர் மிகவும் கலங்கி வருவதாகவும், சிலசமயங்களில் விவசாய நிலங்களுக்கு பயன்படுத்தக்கூடிய எருவு, மருந்துகள் கலந்து வருவதால் பொதுமக்கள் இதனை பயன்படுத்தும் போது நோய் தொற்று ஏற்படுவதாக தெரிவித்தனர்.

எனவே இதுசம்மந்தமாக பலமுறை பிக்கட்டி பேரூராட்சி அலுவலகத்தில் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆதலால் சிவசக்தி நகரை சேர்ந்த பொதுமக்கள் தாங்களாகவே சேர்ந்து 3000 மீட்டர் குடிநீர் குழாய் வாங்கி உள்ளதால் அதனை பயன்படுத்தி சிவசக்தி நகர் கிராமத்திற்கு முள்ளிகூர் கிராமம் வட்டபாறையில் இருந்து குடிநீர் வழங்க வேண்டும் என்று கூறி தலையில் அவர்களது கிராமத்திற்கு வரக்கூடிய கலங்கிய தண்ணீரை பெண்மணி ஒருவர் தலையில் சுமந்து நூதன முறையில் ஆட்சியரிடம் மனு அளிக்க சுமார் நூற்றுக்கும் மேற்ப்பட்டோர் வந்திருந்தனர்.

https://youtu.be/5H-MBaihsVM

CATEGORIES
TAGS