
செய்தியாளர் பி. முனீஸ்வரன்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விறுவிறுப்பாக விவசாயம் நடைபெற்றுக் கொண்டு வருகிறது. பல வருடங்களாக மழை பொய்த்துப் போயுள்ள நிலையில் தற்பொழுது இரண்டு வருடங்களாக மழை அதிகளவில் பெய்து வருவதால் கண்மாய் நீர் நிலைகள் அதிக அளவில் நிறைந்துள்ளதால் திருப்புவனம் சுற்றுவட்டார விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆனால் போதுமான உரம் கிடைக்காததால் சில விவசாயிகள் விவசாயம் செய்யவில்லை என்று அந்தப் பகுதி விவசாயிகள் கூறினர் திருப்புவனம் வட்டத்தைச் சேர்ந்த பிரமனூர் கிராமத்தைச் சேர்ந்த பெரியகருப்பன் மகன் கருப்பையா விவசாயி கூறியதாவது எங்களுக்கு போதுமான உரம் கிடைக்கவில்லை தமிழக அரசு உதவி செய்தால் நன்றாக இருக்கும் விவசாயிகள் ஆர்வமாக விவசாயம் செய்வார்கள் என்று கூறினார்.
CATEGORIES சிவகங்கை