BREAKING NEWS

75 கோடி ரூபாய் மதிப்புடைய கட்டிடம் நிலம் மீட்பு ஓராண்டு முயற்சிக்குப் பின் மதுரை உயர்நீதிமன்ற கிளையின் தீர்ப்பால் தஞ்சை மாநகராட்சிக்கு கிடைத்த வெற்றி.

75 கோடி ரூபாய் மதிப்புடைய கட்டிடம் நிலம் மீட்பு ஓராண்டு முயற்சிக்குப் பின் மதுரை உயர்நீதிமன்ற கிளையின் தீர்ப்பால் தஞ்சை மாநகராட்சிக்கு கிடைத்த வெற்றி.

தஞ்சாவூர்,

தஞ்சையின் மையப்பகுதியில் ஆக்கிரமிப்பில் இருந்த மாநகராட்சிக்கு சொந்தமான 75 கோடி ரூபாய் மதிப்புடைய கட்டிடம் நிலம் மீட்பு ஓராண்டு முயற்சிக்குப் பின் மதுரை உயர்நீதிமன்ற கிளையின் தீர்ப்பால் மாநகராட்சிக்கு கிடைத்த வெற்றி மேயர் ராமநாதன் பேட்டி:

 

 

தஞ்சையின் மையப்பகுதியில் 150 ஆண்டு பழமையான கட்டிடம் யூனியன் கிளப் கட்டிடம்

 

30 ஆயிரம் சதுர அடி நிலம் கொண்ட பகுதியை சிலர் ஆக்கிரமித்துக் கொண்டு யூனியன் கிளப் கட்டிடத்தில்   பணம் வைத்து சீட்டு விளையாடுவது, மது அருந்துவது உள்ளிட்ட கேளிக்கை மையமாக பயன்படுத் தியதையடுத்து.

 

தஞ்சை மாநகராட்சி நிர்வாகம் முறையாக நீதிமன்றத்தில் ஆவணங்களை தாக்கல் செய்து வழக்கு தொடுத்ததையடுத்து,

 

மதுரை உயர்நீதிமன்ற கிளை 30 ஆயிரம் சதுர அடி நிலமும் தஞ்சை மாநகராட்சிக்கு சொந்தமானது என்று தீர்ப்பு கூறியதையடுத்து,

 

 

மேயர் ராமநாதன், தஞ்சை நகரமைப்பு அலுவலர் ராஜசேகர் உள்ளிட்ட மாநாகராட்சி பொறியாளர்கள் மீட்கப்பட்ட யூனியன் கிளப் கட்டிடத்தை கையகப்படுத்தி,

 

இந்த இடம் தஞ்சை மாநகராட்சிக்கு சொந்தமானது, என்று பெயர் எழுதினர்

இது குறித்து தஞ்சை மேயர் ராமநாதன் கூறுகையில்

 

தஞ்சை மாநகராட்சிக்கு சொந்தமான இடம் ஆக்கிரமிப்பில் இருந்தது நீதிமன்றம் மூலம் மீட்டுள்ளோம் மதுரை உயர்நீதிமன்றம் மாநகராட்சிக்கு சொந்தமானவை என்று தீர்ப்பு வழங்கியது மகிழ்ச்சியளிக்கிறது 75 கோடி ரூபாய் நிலம் மீட்கப்பட்டுள்ளது என்றவர்.

150 ஆண்டு கால கட்டிடம் என்பதால் கட்டிடத்தின் உறுதித்தன்மையை ஆய்வு செய்யப்படும் என்றார்.

 

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )