BREAKING NEWS

44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி 28ம் தேதி தொடங்க உள்ளதை ஒட்டி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இடையிலான செஸ் போட்டியை தஞ்சை சட்டமன்ற உறுப்பினர் டி.கே.ஜி. நீலமேகம் தொடங்கி வைத்தார்.

44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி 28ம் தேதி தொடங்க உள்ளதை ஒட்டி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இடையிலான செஸ் போட்டியை தஞ்சை சட்டமன்ற உறுப்பினர் டி.கே.ஜி. நீலமேகம் தொடங்கி வைத்தார்.

44வது சர்வதேச ஒலிம்பியாட் போட்டி வருகிற 28ம் தேதி சென்னையில் நடைபெறுவதை ஒட்டி, இப்போட்டியில் விளையாடவும், பார்வையாளர்களாக பங்கேற்கவும் தகுதி தேர்வு போட்டி ஒரு வாரமாக நடந்து வருகிறது.

இன்று தஞ்சை கல்யாண சுந்தரம் மேனிலை பள்ளியில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இடையிலான மாவட்ட அளவிலான செஸ் போட்டி நடைப்பெற்றது. போட்டியை தஞ்சை சட்டமன்ற உறுப்பினர் டி.கே.ஜி. நீலமேகம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சிவக்குமாருடன் விளையாடி போட்டியை தொடங்கி வைத்தார்.

இதில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை 270 மாணவ, மாணவிகள் பங்கேற்று விளையாடினர். இப்போட்டியில் வெற்றி பெறும் 4 பேர் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்க உள்ளனர்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )