BREAKING NEWS

44 லட்சம் யூடியூப் சேனல்களுக்கு தடை…

44 லட்சம் யூடியூப் சேனல்களுக்கு தடை…

பரிசுத்திட்டங்களை தொடர்ச்சியாக அறிவிக்கும் ஸ்பேம் ரக வீடியோக்கள், பின்னூட்டங்களில் பொய் விளம்பரங்களை செயல்படுத்தும் ஸ்பேம்கள் போன்றவற்றை யூடியூப் விதிமுறைகள் அனுமதிப்பதில்லை. அந்த அடிப்படையில் யூடியூப் நிறுவனத்தின் சமூகவிதிமுறைகளை மீறியதற்காகவும் ஸ்பேம் ரக வீடியோக்களை பதிவேற்றியதற்காகவும் இந்த வருடம் ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை 44 லட்சம் யூடியூப் சேனல்கள் தடைசெய்யப்பட்டு இருப்பதாக யூடியூப் நிறுவனம் வெளியிட்டுள்ள சமூக வழிகாட்டுமுறைகள் அமலாக்க அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வருடம் ஜனவரி முதல் மார்ச் மாதம் வரையில் 3 மாதங்களுக்குள்ளாக 38 லட்சம் வீடியோக்களை யூடியூப் நிறுவனம் நீக்கியிருக்கிறது. இதில் 91 சதவீத வீடியோக்கள் யூடியூப் நிறுவனத்தின் மென்பொருள்கள் வாயிலாக கண்டறியப்பட்டு நீக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்த 3 மாதங்களில் 94.3 கோடி ஸ்பேம் ரக பின்னூட்டங்களும் நீக்கப்பட்டுள்ளது.

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )