தென்றங்கன்று வைப்பதற்கு குழி தோண்டிய போது பஞ்சலோக நடராஜ் சிலை கண்டேடுப்பு.

தென்காசி மாவட்ட செய்தியாளர் கிருஷ்ணகுமார்.
பஞ்சலோக நடராஜ் சிலை கண்டுபிடிக்கப்பட்டது. பொதுமக்கள் கோயிலில் வைத்து சிறப்பு வழிபாடு செய்து வருகின்றனர்.
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே ராமநாதபுரம் நாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட புஞ்சை நிலம் ஊருக்கு மேற்கே பட்டாங்காடு காளியம்மன் கோவில் அருகே உள்ளது.
அப்பகுதியில் தென்னங்கன்று நடுவதற்கு நேற்று காலை நிலத்தை உழுத போது எதிர்பாராத வகையில் நிலத்திலிருந்து நடராஜர் சிலை ஒன்று இருந்ததைக் கண்டு மகிழ்ச்சியுற்றனர்.
அதனை கொண்டு வந்து ராமநாதபுரம் பேருந்து நிலையம் அருகே உள்ள ஸ்ரீ சிவபாக்கிய விநாயகர் கோவில் வைத்து மாலைகள் மற்றும் பட்டாடைகள் உடுத்தி தீபாரதனை காட்டி பூஜை செய்து வருகின்றனர்.
சம்பவம் குறித்து இன்று காலை சிவகிரி தாசில்தாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
இதனை ஒட்டி சம்பவ இடத்துக்கு சிவகிரி தாசில்தார் செல்வகுமார், சிவகிரி வருவாய் ஆய்வாளர் சரவணன், ராமநாதபுரம் கிராம நிர்வாக அலுவலர் ராமலட்சுமி மற்றும தலையாரி சிலை வைக்கப்பட்டுள்ள இடத்திற்கு வருகை தந்து பார்வையிட்டு ஆய்வு செய்தனர் .
இது குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் தொல்லியல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கண்டெடுக்கப்பட்ட நடராஜர் சிலையானது சுமார் 52 கிலோ எடையும் இரண்டரை அடி உயரம் உள்ளது.
மேலும் இவ்வூர் மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு நடராஜர் சிலை முன்பு அமர்ந்து பஜனை பாடல்கள் பாடி வருகின்றனர்.
ஊரில் உள்ள அனைத்து கடைகள் அடைக்கப்பட்டு பொதுமக்கள் தங்களது பணிகளுக்கு செல்லாமல் பக்தி மார்க்கத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பூமியில் உழுத பொழுது கிடைத்த நடராஜர் சிலையை காண ஏராளமான மக்கள் திரண்டு வணங்கி வருவது இப் பகுதியில் பரபரப்பு ஏற்ப்பட்டுள்ளது.