தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் தேரடி திடலில் ஆதித்தமிழர் கட்சியினர் கைது.

செய்தியாளர் கிருஷ்ணகுமார்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் தேரடி திடலில் ஆதித்தமிழர் கட்சியின் மாநில தலைவர் ஜிகே என் தலைமையில் தேரடி திடலில் 10 சதவீத இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும்தீண்டாமை ஒழிப்பு சட்டத்தை தீவிர படுத்தப்பட வேண்டும்,
தமிழக ஆளுநரை திரும்ப பெற வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்யப் போவதாக காவல்துறையினரிடம் அனுமதி பெற்று விட்டு, அரியநாயகிபுரம் பள்ளி மாணவன் தற்கொலையை குறிப்பிட்டும், சமுதாய ரீதியாகவும்பேசியதாக கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 23 ஆதித்தமிழர் கட்சியினரை.

காவல்துறையினர் கைது செய்தனர் பின்னர் அவர்களை தனியார் திருமண மண்டபத்திற்கு அழைத்துச்சென்று கொண்டிருந்தபோது ராஜபாளையம் திருவேங்கடம் சாலை சந்திப்பில் அதே கட்சியைச் சேர்ந்த முப்பதுக்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட கட்சியினரை கைது செய்து அழைத்துச் சென்ற காவல் நிலைய வாகனங்களை மறித்து சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் காவல்துறையினருக்கும் ஆதித்தமிழர் கட்சியினருக்கும் படம் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனை அடுத்து சாலை மறியலில் ஈடுபட்ட 30க்கும் மேற்பட்டோரும் கைது செய்யப்பட்டனர். ஏற்கனவே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 23 பேருடன் சாலை மறியலில் ஈடுபட்ட 30க்கும் மேற்பட்ட ஆதி தமிழர் கட்சியின் கைது செய்யப்பட்டனர்.
மேலும் காவல்துறையினருக்கும் ஆதித்தமிழர் கட்சியினருக்கும் இடையே தள்ளு முள்ளும் ஏற்பட்டது சுமார் அரை மணி நேரம் நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.போர்க்களம் போல் காட்சி அளித்தது.
