டாஸ்மாக்கில் புகுந்த பாம்பை கண்டு ஓட்டம் பிடித்த மது பிரியர்கள்.

தேனி முத்துராஜ்
தேனி பழைய பேருந்து நிலையம் அருகில் பத்ரகாளியம்மன் கோயில் செல்லும் பாதையில் அரசு மதுபான கடை செயல்பட்டு வருகிறது. இன்று கடையின் விற்பனையாளர் கடையை திறந்து மது பிரியர்களுக்கு மதுபானை விற்பனை செய்து கொண்டிருந்தார்.
அப்போது பாம்பின் சத்தம் கேட்டு கடைக்குள் பார்த்தபோது பாம்பு இருப்பதை அறிந்து அங்கிருந்தவர்கள் கடையை விட்டு வெளியே ஓட்டம் பிடித்தனர். பின்னர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் நீண்ட நேரம் தேடுதலுக்கு பின்னர் மதுபான கடைக்குள் புகுந்த பாம்பினை லாவகமாக பிடித்து சென்றன.
கடைக்குள் புகுந்தது சுமார் 5 அடி உயரம் கொண்ட பாம்பு என்றும் கொடிய விஷம் தன்மை கொண்டது என்றும் பிடிக்கப்பட்ட பாம்பினை வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்படும் என தெரிவித்தனர்.
CATEGORIES தேனி