திமுக அரசை கண்டித்து அதிமுக ஒன்றிய கழகம் சார்பில் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ பேச்சு..

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம்
பொங்கல் பரிசு குறித்து எந்தவித அறிவிப்பும் வெளியிடாமல் தமிழக மக்களை திமுக அரசு ஏமாற்றி வருகிறது என கோவில்பட்டியில் முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ பேச்சு..
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி இ.எஸ்.ஐ மருத்துவமனை அருகில் திமுக அரசை கண்டித்து அதிமுக ஒன்றிய கழகம் சார்பில் திமுக அரசின் மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வு, சட்ட ஒழுங்கு சீர்கேடு, வன்கொடுமைகள், பெண்கள் பாதுகாப்பு, விலைவாசி உயர்வு, சொத்து வரி உயர்வு, உள்ளிட்டவைகளை உயர்த்திய திமுக அரசை கண்டித்தும்,
உயர்த்தப்பட்ட கட்டணங்களை திரும்ப பெற வலியுறுத்தியும் ஒன்றிய செயலாளர்கள் அய்யாதுரை பாண்டியன், அன்புராஜ், தலைமையில் முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சரும், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினரும் கடம்பூர் ராஜூ கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார்.
அப்பொழுது முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு பேசுகையில் : திமுக ஆட்சி மக்கள் விரோத ஆட்சியாக மாறிப் போய்விட்டது. அதிமுக ஆர்ப்பாட்டத்தை நடத்த விடாமல் திமுகவினர் காவல்துறையாக மாறி அராஜகத்தில் ஈடுபட்டனர்.
திமுக மிரட்டல்களுக்கெல்லாம் அதிமுக அஞ்சப்போவதில்லை அதிமுக ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறை அனுமதி அளித்த பிறகும் ஆர்ப்பாட்டத்தை நடத்த விடாமல் அராஜகத்தில் ஈடுபட்டடு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் போல் திமுக நிர்வாகி செயல்படுவது வியப்பாக உள்ளது இம் மாதிரியான செயல்கள் எல்லாம் திமுக ஆட்சியில் தான் நடைபெறும்.
தேர்தலில் வெற்றி பெற்று வந்த பிறகு குடும்பத் தலைவிக்கு 1000 வழங்குவேன் என்று கொடுத்த வாக்குறுதி எண்ணாயிற்று இதுபோன்று தேர்தலில் அளித்த எந்த வாக்குறுதியும் நிறைவேற்ற வில்லை
கடந்த அதிமுக ஆட்சி காலத்தின் போது தமிழக மக்கள் பொங்கல் பண்டிகை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்ற எண்ணத்தில் எடப்பாடியரின் அதிமுக அரசு 2500 ரூபாய் பொங்கல் பரிசாக வழங்கியது
தற்போதைய திமுக அரசு அடுத்த மாதம் பொங்கல் பண்டிகை கொண்டாட பட உள்ள நிலையில் பொங்கல் பரிசு குறித்து எந்தவித அறிவிப்பும் வெளியிடாமல் தமிழக மக்களை திமுக அரசு ஏமாற்றி வருகிறது என்று பேசினார்.
ஆர்ப்பாட்டத்துக்கு பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், நகர செயலாளர் விஜய் பாண்டியன், மாவட்ட முன்னாள் ஊராட்சி குழு தலைவி சத்யா, மாவட்டம் ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் பழனிசாமி, மாவட்ட அம்மா பேரவை துணைச் செயலாளர் நீலகண்டன், ஆவின் கூட்டுறவு சங்கத் தலைவர் தாமோதரன்,
நகர மன்ற உறுப்பினர்கள் வள்ளியம்மாள் மாரியப்பன், செண்பகமூர்த்தி, மாவட்ட வர்த்தக அணி செயலாளர் ராமர், அம்மா பேரவை நகர செயலாளர் ஆபிரகாம் அய்யாதுரை, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் லட்சுமண குமார், வழக்கறிஞர் அணி மாவட்ட செயலாளர் சிவபெருமான், வழக்கறிஞர் அணி சங்கர் கணேஷ், முன்னாள் நகர பொருளாளர் வேல்முருகன்,
முன்னாள் ஒன்றிய செயலாளர் போடு சாமி,மேல ஈரால் கிளைச் செயலாளர் பொன்ராஜ், மகளிர் அணி இணைச் செயலாளர் ராமலட்சுமி, அதிமுக நிர்வாகிகள் வெள்ளைச்சாமி, அழகர்சாமி, அல்லித்துரை, பழனி குமார்,பழனி முருகன், முருகன், கோபி, ஜெயசிங், குழந்தை ராஜ், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.