BREAKING NEWS

தஞ்சையில் உள்ள பாரத் கல்லூரி வளாகத்தில் விவசாயிகள் தொழில்துறையினர் கூட்டமைப்பு சார்பில் இலவச வேலை வாய்ப்பு முகாம்

தஞ்சையில் உள்ள பாரத் கல்லூரி வளாகத்தில் விவசாயிகள் தொழில்துறையினர் கூட்டமைப்பு சார்பில் இலவச வேலை வாய்ப்பு முகாம்

விவசாயம் பற்றி தெரியாது என்பதையும், விவசாயிகளை ஏளனமாக நினைப்பதையும் இன்றைய இளைய தலைமுறையினர் பேஷனாக சொல்லி வருகிறார்கள் இதை மாற்றிக் கொள்ள வேண்டும் என இளைஞர்களுக்கு அன்பில் மகேஷ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 

 

தஞ்சையில் உள்ள பாரத் கல்லூரி வளாகத்தில் விவசாயிகள், வணிகர்கள் தொழில்துறையினர் கூட்டமைப்பு சார்பில் இலவச வேலை வாய்ப்பு முகாம் நடந்து வருகிறது. 92 முன்னனி நிறுவனங்கள் பங்கேற்று உள்ள இந்த முகாமில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பட்டதாரிகள் கலந்து கொண்டனர்.

 

முகாமை தொடங்கி வைக்க வந்த பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில்.மகேஷ் பொய்யாமொழிக்கு பச்சை துண்டு போர்த்தி விவசாயிகள் வரவேற்றனர் குத்து விளக்கு ஏற்றி முகாமை தொடங்கி வைத்து பேசிய அமைச்சர், நமது முன்னோர்களுக்கு கல்லூரி பக்கம் செல்லவில்லை என்ற ஏக்கம் இருந்தது.

 

 

ஆனால் இன்றைய தலைமுறையினருக்கு அந்த ஏக்கம் இருக்காது பள்ளிக்கல்வி, உயர்கல்வியை முடித்தால் உங்களை கல்லூரிக்கு அழைத்து செல்வது எங்கள் கடமை என்றார். அரசு சார்பில தொழிலாளர் நலத்துறை மூலம் வேலைவாய்ப்பு முகாம் நடத்தி ஆகஸ்ட் மாதம் வரை ஒரு லட்சம் பேருக்கு வேலை வழங்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தார்.

 

 

விவசாயம் பற்றி தெரியாது என சொல்வதையும் விவசாயிகளை ஏளனமாக பார்ப்பதையும் இன்றைய இளைய தலைமுறையினரிடம் பேஷனாக உள்ளது, அவர்கள இல்லை என்றால் நாம் இல்லை வேலை கிடைத்தவுடன் விவசாயிகளை மறந்து விடாதீர்கள் என்றார்.

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )